Simran Son Photo Viral
Simran Son Photo Viral

சந்திரமுகி 2 படம் பற்றி சிம்ரன் பேசியுள்ளார்.

Simran About Chandramukhi 2 : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா பிரபு நாசர் வடிவேலு மற்றும் பலர் இணைந்து நடித்து இருந்தனர்.

யோகிபாபுவிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? – யாருடன் நடிக்கப் போகிறார் தெரியுமா?

பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. படத்தை பி வாசு இயக்க வேட்டையன் வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்திலும் சந்திரமுகியாக முதல் பாகத்தில் நடித்த ஜோதிகாவை நடிக்க வைக்க இருப்பதாகவும் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால் ஜோதிகா இதுவரை படத்தில் என்னை சந்திரமுகியாக நடிக்க அணுகவில்லை. சந்திரமுகி வேடத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறி இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனை அடுத்து சமீபத்தில் ஆரம்பத்தில் சந்திரமுகி பட வாய்ப்பை தவறவிட்ட சிம்ரன் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து தற்போது சிம்ரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

நீருக்கு மேலே படுக்கை, படுக்கைக்கு மேல கவர்ச்சி பிகினியில் போஸ் – கல்யாணத்துக்குப் பிறகும் அடங்காத சாயிஷாவின் கவர்ச்சி (புகைப்படம் உள்ளே)

சந்திரமுகியாக நடிக்க படக்குழுவினர் யாரும் என்னை அணுகவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் சிம்ரன் அமேசன் பிரைம் இல் வெளியான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்திற்காக வாழ்த்துக் கூறி பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.