பிரபல தயாரிப்பாளர் கலைமகன்
முபாரக்குடன் நடிகர் சிம்பு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu With Producer Kalaimagan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தலை மற்றும் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

பிரபல தயாரிப்பாளருடன் நடிகர் சிம்பு - அடுத்த படம் இவருடன் தானா?? தீயாக பரவும் புகைப்படம்.!!

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சிம்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் அவர்களுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் பேரதிர்ச்சி.. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணம்

கலைமகன் முபாரக் அவர்கள் தமிழ் சினிமாவில் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் இடி முழக்கம் என்ற படத்தையும் தயாரிக்கிறார்.

ஆதரவற்றவர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடிய விஷால் – வைரலாகும் வீடியோ..! | Vishal Birthday Celebration

தற்போது நடிகர் சிம்புவுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சிம்புவின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர்தான் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் கலைமகன் முபாரக் இயக்குனர் அமீர் உடன் பேசும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக சிம்புவை இயக்கப் போவது அமீரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகின்றன.