Simbu With Fat Man Ravindran

சிம்புவுடனான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

Simbu With Fat Man Ravindran : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பத்து தல என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தினை ஜில்லுனு ஒரு காதல் புகழ் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது சிம்பு லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் ரவீந்திரன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் பார்த்தால் தெரிகிறது நடிப்பு, பழகினால் தான் தெரியும் நட்பு, இவர் மேல சில பேருக்கு வெறுப்பு, அதற்கு இவர் இல்ல பொறுப்பு என ரைமிங்காக பதிவிட்டுள்ளார். மேலும் இவருடைய தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களும் காத்திருங்கள் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இணையும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.