தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான GOAT திரைப்படம் உலக அளவில் பெரிய ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. மேலும், இதுவரை 300 கோடி என்ற வசூலை தாண்டி பயணிக்கு GOAT திரைப்படம் 500 கோடி பாக்ஸ் ஆபிசில் இடம்பெறுமா என்பது சந்தேகமே.
காரணம், முதல் நாள் இருந்த வசூலோடு ஒப்பிடும்போது, நாளுக்கு நாள் அந்த படத்தின் வசூல் சற்று குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தளபதி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் சுமார் 603 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதே போல தளபதியின் வாரிசு திரைப்படமும் உலக அளவில் 300 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, தல அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக பிரபல நடிகர் தளபதி விஜயை வைத்து இயக்கிய முதலும், கடைசி திரைப்படமாக மாறியுள்ளது கோட் என்றால் அது மிகையல்ல. GOAT படத்தில் மூத்த தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அதே போல, பிரபல நடிகர் மோகன் கோட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர்கள் மட்டுமல்லாமல் கோட் படம் மெகா ஹிட்டாக உதவியது இப்படத்தில் வந்த கேமியோ கதாபாத்திரங்களும் தான்.
பிரபல நடிகை திரிஷா, கிரிக்கெட் வீரர் தோனி, AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த் என்று சிறப்பான பல கேமியோ கதாபாத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஹை-லைட் என்று சொன்னால், பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் கேமியோ தான். அதுவும் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் விஜய் இடையே நடக்கும் கான்வர்சேஷன் தான் கோட் படத்தின் உச்சகட்ட சுவாரசியம்.
மேலும், சிவா மற்றும் மோகன் இடையே நடக்கும் ஒரு சிறு உரையாடல் படத்தில் எடிட்டில் போய்விட்டதாகவும், விரைவில் டெலீட்டட் கட்சியாக அது வெளியாகும் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இந்நிலையில், GOAT திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் வேறொரு நடிகரிடம் டேட் கேட்கப்பட்டதாகவும், ஆனால், அவர் அப்போது கொஞ்சம் பிசியாக படங்களில் நடித்து வந்ததால், அவரால் அந்த கட்சியில் நடிக்கமுடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
அந்த நடிகர் வேறுயாருமல்ல, பிரபல நடிகர் சிம்பு தான். ஏற்கனவே சிம்பு, தளபதி விஜய்க்காக, “வாரிசு” திரைப்படத்தில் ஒரு பாடலில் கேமியோவில் அசத்தியிருந்தார். ஆகையால் அவரிடம் தான் முதலில் அந்த கதாபாத்திரத்திற்காக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கால்ஷீட் கொடுப்பது காரணமல்ல, எந்த கலைஞருக்கும் நடிக்கின்ற மனசு வருவது தானே முக்கியம்.!