தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று கூட சொல்லலாம். சிம்புவே சும்மா இருந்தாலும் மற்றவர்கள் அவரை அப்படியே விடுவதில்லை. இதனால் அவரை சுற்றி எப்போதும் எதாவது பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த படத்தின் சிம்புவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் Simbu is Back என கூறி வந்தனர்.

இது குறித்து தற்போது விஜய் சேதுபதி அது என்ன சிம்பு ஈஸ் கம்பேக்? அந்த வார்த்தையே தவறு. சிம்பு மிகவும் ஸ்ட்ராங்காக இங்கேயே தான் இருக்கிறார். அவருக்காக ரசிகர்கள் உயிரையே கொடுக்கும் அளவிற்கு பாசம் வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.