
Simbu Vs Super Star : நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் பேட்ட படத்துடன் மட்டுமில்லாமல் 2 பாயிண்ட் ஓ படத்துடன் களமிறங்க தயாராகி வருகிறது.
சிம்புவை தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் என்றே சொல்லலாம். அவரை சுற்றி எப்போதும் எந்நேரமும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கும்.
இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
படத்தின் டீஸர் நவம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ளது. அதே சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2 பாயிண்ட் ஓ படமும் ரிலீசாகிறது.
இந்த படத்தின் விளம்பர இடைவேளையில் வந்தா ராஜாவாக தான் வருவேன் டீஸர் திரையிடப்பட உள்ளது. இதன் மூலம் சிம்பு சூப்பர் ஸ்டாருடன் பேட்ட, 2 பாயிண்ட் ஓ என இரண்டு படத்துடன் களமிறங்க உள்ளார்.