Simbu Video With Sister Son

நடிகர் சிம்பு தன்னுடைய மாப்பிள்ளையை கொஞ்சியபடி புதிய காரில் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Simbu Video With Sister Son : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஈஸ்வரன் படத்தை சுசீந்திரன் இயக்க மாநாடு திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இவ்விரண்டு படங்களுக்காக சிம்பு தன்னுடைய எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மன்மதன் கெட்டப்பிற்கு மாறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய மாப்பிள்ளையுடன் ( தங்கையின் மகன் ) அவரின் அம்மா உஷா ராஜேந்தர் வாங்கி கொடுத்த காரில் வலம் வருகிறார்.

இந்த வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்ய சமூக வலைதள பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.