Simbu to Get Engaged in August | Simbu will be engaged in August | simbu marriage | STR | Vantha Rajavathaan Varuven | Kollywood

Simbu to Get Engaged in August :

36 வயதாகும் சிம்புவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தமாம். மேலும் அதைதொடர்ந்து உடனடியாக திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.

விஷால் ஜோடியாகும் அஜித் நாயகி – இதுவரை வெளிவராத தகவல்!

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

இது ஒருபக்கம் இருக்க சிம்புவின் கல்யாணம் குறித்த பேச்சும் தற்போது எழுந்துள்ளது. 36 வயதாகும் சிம்புவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தமாம்.

மேலும் அதைதொடர்ந்து உடனடியாக திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.