Simbu to director Santhanam film : Simbu has promised to give good pictures for fans | STR | Kollywood | Tamil Cinema | Yuvan

Simbu to director Santhanam film :

மீண்டும் ஒரு படத்தை இயக்க சிம்பு திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் சிம்புவால் திரையுலகிற்கு வந்த சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

அரசியலுக்கு வர வேண்டியது அஜித்தா? விஜயா? – எஸ்.ஜே சூர்யா அதிரடி பேச்சு

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

விரைவில் மாநாடு படத்தை துவங்கும் சிம்பு அதுபோக நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

ஆனாலும் இந்த படங்களை எல்லாம் விரைவில் முடித்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை இயக்க சிம்பு திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் சிம்புவால் திரையுலகிற்கு வந்த சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.