Simbu to act in Muthaiah Film :

விரைவில் மாநாடு படத்தை துவங்கும் சிம்பு அதுபோக நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். இதில் ஒரு படத்தை முத்தையா இயக்குகிறாராம்.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.

அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி; வைரலாகும் புகைப்படம் உள்ளே!

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

விரைவில் மாநாடு படத்தை துவங்கும் சிம்பு அதுபோக நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். இதில் ஒரு படத்தை முத்தையா இயக்குகிறாராம்.

முத்தையாவின் அனைத்து படங்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது சிம்புவும் அவருடன் இணைவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.