Simbu Talk
Simbu Talk

Simbu Talk – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. இந்நிலையில் கவுதம் கார்த்திக்குடன் முப்ஃடி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அறிவித்தார்.

தமிழ் திரையுலகில் நடக்கும் புதிய புரட்சி – இனி இப்படி தான்.!

அதுபோக ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக்கில் சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இதுபோக ஹரி, சீமான் கரு. பழனியப்பன் என அடுத்தடுத்து பல இயக்குனர்களின் படங்களில் சிம்பு நடிக்கிறார்.

தற்போது புதிதாக இன்னொரு படத்திலும் சிம்பு கமிட்டாகியுள்ளார். இது அவருடைய சூப்பர் ஹிட் படமான தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகம்.

ஸ்மார்ட்டா கெத்தா இந்தியா வந்த சிம்பு – வைரலாகும் புகைப்படம்

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய துரையே இயக்கவுள்ளார். இந்த படம் குறித்து பேசிய துரை, “தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என சிம்புவே ஆர்வமாக உள்ளார்.

தற்போது படம் பேச்சுவார்த்தையில் தான் உள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும்” என்றார்.