நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நடிகர் தனுஷ் குறித்து மறைமுகமாக பேசி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் நடிகர் சிம்பு தற்போது பல சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்.

ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து விட்டால் பெரிய ஆளா!!… தனுஷை குறி வைத்து பேசிய சிம்புவின் பேட்டி வைரல்!.

அதில் ஒரு பேட்டியில் நடிகர் சிம்பு மறைமுகமாக நடிகர் தனுஷ் குறித்து சில கருத்துக்களை கூறி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் கூறியிருப்பது, சிலர் நிறைய மொழி திரைப்படங்களில் நடித்து விட்டால் பெரிய ஆளாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துவிட்டால் மட்டும் பெரிய ஆளாகி விட முடியாது.

ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து விட்டால் பெரிய ஆளா!!… தனுஷை குறி வைத்து பேசிய சிம்புவின் பேட்டி வைரல்!.

என்னதான் நாம் பல மொழிகளில் நடித்தாலும் நம்முடைய வேலையில் சரியாக இருந்தால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். அப்போதுதான் நாம் பெரிய ஆளாக முடியும் என்று தெரிவித்துள்ளார். இப்படி சிம்பு நடிகர் தனுஷ் குறித்து பேசி இருப்பது ரசிகர்களின் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.