Simbu and Suseenthiran Movie

சிம்பு சுசீந்திரன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Simbu Suseendhiran Movie Producer Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளால் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தனக்கு கதை சொல்லும் இயக்குனர்களின் படங்களை ஓகே செய்து வருகிறார். அந்த வகையில் மாநாடு படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்குவதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிக்கப் போவது யார் என்பது தெரிய வந்துள்ளது. இயக்குனரும் தயாரிப்பாளரும் சிம்புவின் தந்தையுமான டி ஆர் ராஜேந்திரன் தான் இந்த படத்தை தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது.

இதனால் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகி விடுவது கஷ்டம் தான் என கோலிவுட் வாசிகள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.