Aishwarya Dutta

Aishwarya Dutta & Simbu : பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிம்பு.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் சம்பாதித்தாலும் மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே சென்றாயன் இரண்டாவது முறையாக வீட்டிற்குள் சென்றிருந்த போது சிம்பு உன்னை அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க இருப்பதாக கூறினார்.

இந்த சர்ப்ரைஸால் ஐஸ்வர்யா துள்ளி குதித்தார். ஆனால் இன்று வரை இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் சிம்பு ஐஸ்வர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பது சென்றாயன் கூறியது உண்மை தான் என தோன்ற வைக்கிறது.

ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் சிம்பு, மஹத், அனிருத் ஆகியோர் சென்று ஐஸ்வர்யாவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

aishwarya dutta

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.