Simbu starts Reading Maanaadu Script : Kalyani Priyadarshan, Simbu, STR, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Simbu starts Reading Maanaadu Script :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

மாநாடு படத்தில் யார் யார் நடிக்கிறாங்க தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த பிரச்னைகளை எல்லாம் சரிசெய்து இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 25ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தொடங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தமுறை ஜூலை 8-ம் தேதி அதுவும் ஊட்டியில் படம் துவங்கும் என சொல்லப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது ஒரு வீடியோ வெளியாகிறது.

இதில் சிம்பு மாநாடு படத்தின் ஸ்க்ரிப்டை படிப்பது போன்று உள்ளது.
எனினும் ஸ்க்ரிப்ட் படிப்பதற்கெல்லாம் வீடியோவா என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.