Simbu Speech in Rose Day

பத்திரிக்கையாளர் கேள்வியால் நான் அத பத்தி பேச வரல என பாதியிலேயே எழுந்து சென்றுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Speech in Rose Day : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் : சுகாதாரத்துறை அறிவிப்பு

இந்த நிலையில் நடிகர் சிம்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் Rose Day விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ‌‌‌இந்த இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உடன் இணைந்து நடனமாடிய அவர்களை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் சிம்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

எனக்கு அடையாளம் கொடுத்தது Vijay Antony சார் தான்! – Actor Adithya Kathir Speech | Kodiyil Oruvan

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் படத்தில் புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என சொல்கிறோமே என கேள்வியை தொடங்க சிம்பு அதைப் பற்றி நான் இங்கே பேச வரவில்லை என பாதியிலேயே எழுந்து சென்று உள்ளார். மேலும் மாநாடு போன்ற படங்கள் குறித்த கேள்விக்கு நான் இங்கே சினிமா பற்றி பேச வரவில்லை என கூறியுள்ளார்.

கடந்தாண்டு என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் ஆனால் அப்போது என்னால் வர முடியவில்லை அதனால் தான் இந்த ஆண்டு கலந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

சிம்பு தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.