மாநாடு படத்தின் வெற்றியால் நடிகர் சிம்பு தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார்.
Simbu Salary for Upcoming Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய் ஜி மகேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன் என திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சிம்பு திரைப்பயணத்தில் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
Naalai Namadhe படத்தில் நடிக்க முடியாமல் போனது என்னுடைய இழப்புதான் – KamalHaasan | KS Sethumadhavan

இதன் காரணமாக இதுவரை ஆறு கோடி சம்பளம் வாங்கி வந்த சிம்பு தன்னுடைய சம்பளத்தை 20 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க லலித் குமார் அவர்கள் அணுகியபோது சிம்பு சொன்ன சம்பளத்தை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்து போனதாக சொல்லப்படுகிறது.