
அடுத்தடுத்த வெற்றிகளால் சிம்பு சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தால் ரெட் கார்டு போடப்பட்டு பல வருடங்கள் நடிக்காமல் இருந்து தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, 10 தல உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள சிம்பு 48 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

தொடர் வெற்றி காரணமாக நடிகர் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்தி இந்த படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்தடுத்த படங்களின் ரிசல்ட்டை வைத்து அவரது சம்பளம் மேலும் உயரும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
