STR Review

Simbu Review :

எப்பா படமா இது? என சிம்பு விஸ்வாசம் ட்ரைலரை பற்றி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த தகவல் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் நேற்று மதியம் இணையத்தில் வெளியாகி இருந்தது. ட்ரைலரை பற்றி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தல ரசிகரான சிம்புவும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். எப்பா படமா இது? செம மாஸாக இருக்கு. விஸ்வாசம் ட்ரைலருக்காக ஆவலுடன் காத்திருந்தோம் என கூறியுள்ளார்.

மேலும் வசனம், ஸ்டண்ட், மியூசிக் என எல்லாத்தையும் படக்குழு மிரட்டி இருக்காங்க. விஸ்வாசம் படத்துக்காக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கேன். படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.