Maanaadu
மாநாடு திரைப்படத்தில் முஸ்லிமாக நடிக்க என்ன காரணம் என்பதை சிம்பு பேசியுள்ளார்.

Maanaadu Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி 19 முதல் தொடங்க உள்ளது.

இந்நிலையில் சிம்பு இப்படத்தில் முஸ்லிமாக நடிப்பது ஏன் என பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது எனக்கு பெரியாரை பிடிக்கும் அதனால் பெரியார் குத்து என்ற பாடலை பாடினேன்.

எனக்கு கடவுள் பக்தி உண்டு என்பதால் சபரி மலைக்கு சென்று வந்தேன், மதம் சார்ந்த பிரச்சனைகள் தலைவிரித்தாடும் நிலையில் எனக்கு எல்லா மதமும் பிடிக்கும் என்பதால் இப்படத்தில் முதல் முறையாக முஸ்லிமாக நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அப்துல் காலிக் என்ற பெயர் யுவன் ஷங்கர் ராஜாவின் முஸ்லீம் பெயர் தான் எனவும் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.