Simbu Request to Gautham Menon
Simbu Request to Gautham Menon

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தின் டீஸரால் சிம்பு கௌதம் மேனனுக்கு போன் செய்துள்ளார்.

Simbu Request to Gautham Menon : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து சினிமா வேலைகளையும் முடங்கி போனதால் வீட்டிலிருந்தே கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்தில் டீசர் சமீபத்தில் வெளியானது இதில் திரிஷா கார்த்திக் உடன் பேசுகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை பின்னணியில் ஒலிக்கிறது.

விஜய்யை இயக்க தயாராகும் கௌதம் மேனன்? உண்மை என்ன? – இணையத்தில் வைரலாகும் பரபரப்பு தகவல்

இதனால் ரசிகர்களுக்கு வின்னைத்தாண்டி வருவாயா 2 எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது. இதை ஆசை சிம்புவிற்கும் ஏற்பட்டுள்ளது.

டீசரை பார்த்து விட்டு உடனே கௌதம் மேனனுக்கு போன் அடித்த சிம்பு எப்படியாவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை 2 உருவாக்குங்கள். இப்போது வேண்டுமானாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் கௌதம் மேனனும் அதற்கான பணியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகமொத்தத்தில் சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் ஒரு மாஸான கொண்டாட்டம் இருக்கு என்பது மட்டும் உறுதி.