இன்ஸ்டாகிராமில் சிம்பு செய்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Simbu Record in Instagram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். இவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாத ஒன்று.

சிம்பு செய்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

இறுதியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள மாநாடு திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவருக்கு சமூக வலைதள பக்கங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருப்பதால் சமீபத்தில்தான் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இணைந்தார். இந்தக் குறுகிய காலத்தில் அவரை 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த சாதனையை சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.