Simbu Ready to Visit Sabarimala

சபரிமலைக்கு மாலை அணிந்து உள்ளார் நடிகர் சிம்பு. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Simbu Ready to Visit Sabarimala : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படக்குழு இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்கிறது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் பொங்கல் தினத்தில் மாஸ்டர் படத்தைத்தான் வெளியிடுவோம் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க சிம்பு நாடு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நிலையில் தற்போது அவர் சபரிமலைக்கு மாலை அணிந்து உள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அப்போ மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு பங்கேற்க மாட்டாரா? சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த பிறகுதான் மாநாடு ஷூட்டிங் தொடங்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.