நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்துவரும் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு “பத்து தல” திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பத்து தல ஷூட்டிங் நிறைவு!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

ஒபேலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சிம்பு தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.