Simbu Next Movie Update

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இயக்குனருடன் சிம்பு இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu Next Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு மஃப்டி பட ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது டி ராஜேந்தர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவருடன் இணையும் சிம்பு.. இப்போ இதெல்லாம் செட்டாகுமா? புதிய படம் பற்றி வெளியான தகவல்.!!

சிம்பு தன்னுடைய அப்பா டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படங்களில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிம்புவின் முதல் படத்தையும் டி ராஜேந்தர் தான் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு சிம்பு தன்னுடைய அப்பா டி ராஜேந்தர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில் இவர்கள் கூட்டணியில் படம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.