simbu
நடிகர் சிம்புவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Simbu new picture goes viral in social networks – நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அதிக எடைபோட்டு அவர் மிகவும் குண்டாக காணப்பட்டார். எனவே, யுடியூப் விமர்சகர்கள் பலரும் அவரை கிண்டலடித்தனர். எனவே, உடல் எடையை குறைக்க அவர் தாய்லாந்து என்றார். கடந்த சில மாதங்களாகவே அவர் அங்கு தங்கியிருந்தார். இதன் காரணமாக மாநாடு படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

simbu

அங்கு தங்கியிருந்த படியே ‘மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். சிம்புவிற்காக ‘மஹா’ திரைப்படத்தில் சில காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆணுடன் நெருக்கமாக இருக்கும் அபிராமி, இவர் தான் காதலரா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில், அதிக அளவு தாடி வளர்த்துள்ளார். அது ஒரிஜினலா இல்லை ஒட்டு தாடியா என்பது தெரியவில்லை. இது எங்கு எடுக்கப்பட்டது எனவும் தெரியவில்லை.

simbu

ஆனால், இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் #STR_Returns என்கிற ஹேஷ்டேக்கில் இப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.