Simbu Movies Satellite Rights Details

படம் ஹிட்டாகும் சிம்புவின் படங்களின் சாட்டிலைட் உரிமை உங்கள் விற்பனையாகாத திரைப்படங்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Simbu Movies Satellite Rights Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகி வெளியான மூன்று படங்களின் சாட்டிலைட் உரிமை இதுவரை விற்கப்படாமல் இருந்து வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் சாட்டிலைட் உரிமை தற்போது வரை விற்கப்படவில்லை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போதே தோல்வியை தழுவியதால் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வாலு மற்றும் இது நம்ம ஆளு ஆகிய திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமம் தற்போது வரை விற்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.