சிம்பு நடிப்பில் திரைக்கு வெளிவர தயாராக இருக்கும் “வெந்து தணிந்தது காடு” என்ற படத்திற்கான ரிலீஸ் தேதியை இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

‘மாநாடு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்புவின் நடிப்பில் திரையில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர்களின் காம்போவில் வெளியான படங்களான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சிம்பு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் கவுதம் மேனன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

அதனால் மீண்டும் இவர்களின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி என்று இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

சிம்பு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் கவுதம் மேனன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

சமீபத்தில் இப்படத்திற்கான டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான   ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என கௌதம் மேனன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.