தெலுங்கு சூப்பர் ஸ்டாரை சந்தித்துள்ளார் நடிகர் சிம்பு. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Simbu Meet With Mahesh Babu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தைப் பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறனர்.
இந்த நிலையில் சிம்புவும் மகேஷ் பாபுவும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வந்த போது எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
மகேஷ் பாபு நடித்து வந்த மகரிஷி திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்ததால் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.