நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu Marriage With Nidhi Agarwal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது ஹீரோவாக 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இவரது நடிப்பில் இறுதியாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.

மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னதாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities | Saravana Stores

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்? பொண்ணு இவர்தானாம் - தீயாக பரவும் தகவல்

இந்த படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு தற்போது காதலித்து வருவதாகவும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்திய அணியுடன் நாளை பேட்மிண்டன் போட்டி; இங்கிலாந்து அணி திடீர் விலகல்

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்? பொண்ணு இவர்தானாம் - தீயாக பரவும் தகவல்

இதற்கு முன்னதாக சிம்பு ஹன்சிகா நயன்தாரா உள்ளிட்டோருடன் காதலில் இருந்தார். அதேபோல் நிதி அகர்வால் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.