Simbu Marriage
Simbu Marriage

Simbu Marriage : சினிமா எனும் நட்சத்திர உலகில் அவ்வளவு எளிதில் எவராலும் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.

திறமையுடன் போராடும் எத்தனையோ முகம் தெரியா கலைஞர்களுக்கு இன்றும் சினிமா ஒரு எட்டா கணியாகவே இருக்கிறது.

அப்படியான உலகில் சிலர் பிறக்கும் போதே நடிகராகும் வாய்ப்பை பெறுகிறார்கள். அந்த வரிசையில் டி.ராஜேந்தரின் வாரிசாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் போதே லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமானவர் சிம்பு.

அதெல்லாம் 10-வது படிக்கும் போதே பண்ணிட்டேன் – ரசிகரின் கேள்விக்கு யாஷிகாவின் அதிர்ச்சி பதில்.!

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்..

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது. இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் இவரது திருமணம் குறித்த பேச்சு தற்போது எழுந்துள்ளது. அண்மையில் இதுகுறித்து பேசிய டி.ஆர், “ சிம்புவுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போதைக்கு குறளரசன் திருமணத்தில்தான் முழு கவனம் உள்ளது. இது முடிந்ததும் சிம்புவுக்கு அவருக்கு பிடித்த பெண்ணாக பார்ப்போம்” என்றார். குறளரசன் திருமணம் விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here