Simbu Movie

Simbu Movie : பொங்கல் ரேஸில் சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படம் இணைந்துள்ளது.

இந்த படம் நிச்சயம் பொங்கலுக்கு வரும் என சிம்பு தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் என பெயரெடுத்தவர் சிம்பு. அவர் அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் யாராவது அவரை வம்பிழுத்து வருவது வழக்கமாகி விட்டது.

AAA பட பிரச்சனை இன்று வரை ஓயவில்லை. தற்போதும் அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்கள் மீண்டும் AAA படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் என கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்களை பதற்றம் அடைய வேண்டாம், யாரையும் விமர்சிக்க வேண்டாம். அன்பை மட்டும் பரப்புங்கள் என கோரிக்கை வைத்ததோடு உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதோ சிம்பு வெளியிட்ட அறிக்கை :

Simbu

Simbu Movies

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.