Simbu in Tamilan Song in YouTube

சிம்புவின் ஈஸ்வரன் பட பாடல் வெளியான நேரம் பார்த்து யூடியூப் மொத்தமாக முடங்கிப் போயுள்ளது.

Simbu in Tamilan Song in YouTube : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இவரது நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படமும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இன்று காலை ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து தமிழன் என்ற பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாடலும் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறத் தொடங்கியது.

இப்படியான நிலையில் யூடியூப் உட்பட கூகுள் நிறுவனத்தின் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களில் மொத்தமாக முடங்கிப் போய் உள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் தலைவன் பாட்டு வெளியான நேரம் பார்த்தா இப்படி நடக்கணும் என ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

யூடியூப் உட்பட கூகுள் நிறுவனத்தின் பல்வேறு பக்கங்கள் முடங்கிப் போய் உள்ளதால் ட்விட்டரில் இதுகுறித்த ஹாஸ்டேக்குகள் டிரெண்ட்டிங்கில் இடம் பெற்றுள்ளது.