Sigappu Rojakkal
Sigappu Rojakkal

Simbu in Sivappu Rojakkal 2 : தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக விளங்கிய புகழ்பெற்ற பாரதிராஜாவின் “ சிவப்பு ரோஜாக்கள்” படம்தான். இந்தப்படத்தில் கமலின் அட்டகாச நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் திரையரங்கில் 175 நாட்கள் ஓடி பெரிய பிளாக்பஸ்டர் படவரிசைக்கு சென்றது.

இந்த நிலையில் சிவப்பு ரோஜாக்கள் 2 ஆம் பாகம் எடுக்க உள்ளதாக வெளியான செய்திகளை கேட்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். இதைத்தொடர்ந்து பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

நானும் மனுஷி தானே.. சூர்யா தேவிவுக்கு உதவ முன் வருவதாக… அண்டர் பல்டி அடித்த நடிகை வனிதா!

இந்த செய்தியை குறித்து ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பை மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

சமீபத்தில் சிவப்பு ரோஜாக்கள் 2 நிறைய செய்திகள் வருகின்றது. நானும் என் அப்பா பாரதிராஜாவும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம். சிவப்பு ரோஜாக்கள் 2 பற்றி எந்தத் தகவலையும் நம்ப வேண்டாம், ரசிகர்களாகிய உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.