Simbu & Suseendhiran Movie Update
Simbu & Suseendhiran Movie Update

பக்கா கிராமத்து கதையில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu in Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட டி ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது இவர் ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸான கதையுடன் 10 வருஷமாக அஜித்தின் வார்த்தைக்காக காத்திருக்கும் இயக்குனர் – ஓகே சொல்வாரா தல?

சமீபத்தில் சிம்புவை சந்தித்த சுசீந்திரன் பக்கா கிராமத்து கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதை சிம்புவுக்கும் பிடித்துப்போக அடுத்ததாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக சிம்பு கோவில் என்ற பக்கா கிராமத்து கதையில் நடித்து இருந்தார். அப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவை மீண்டும் ஒரு பக்கா கிராமத்து கதையில் பார்க்கலாம் என்பதால் அவரது ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.