கோ படத்தில் நடித்த சிம்பு நாயகியை தன் விருப்பப்படி போடாததால் அப்படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu in Ko Movie Secrets : தமிழ் சினிமாவில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கோ. இந்த படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்திருந்தார்.

பத்திரிக்கையாளர்களின் கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க இருந்தவர் சிம்பு தான். இவர் இந்த படத்தில் பல்வேறு காட்சிகளில் நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது சிம்பு இப்படத்திலிருந்து விலகி இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. சிம்பு தனக்கு இந்த படத்தில் தனக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் இயக்குனர் இதற்கு செவி சாய்க்காததால் இந்த படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில் சிம்பு கே வி ஆனந்த் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கே வி ஆனந்த் உயிரிழந்துவிட்டார் என்பது சோகமான தகவல்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.