Simbu in Corona Kumaru Movie

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu in Corona Kumaru Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. கோகுல் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருப்பார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் கொரானா குமாரு என்ற பெயரில் உருவாக உள்ளது. ‌‌

எனக்கு இரண்டு வரம் வேண்டும் : பெற்றவளிடம் கேட்கிறான் கர்ணன்

கொரானா குமாரு படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் சந்தானம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சந்தானத்திற்கு பதில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தின் கதையைக் கேட்டு அவரும் ஓகே சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‌‌ இந்த படத்தினை சினிமாவாலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Vijay-யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD