நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொகுத்து வழங்க யார் காரணம் என்று தெரியவந்துள்ளது.

Simbu Host Bigg Boss Ultimate : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய இவர் 5 சீசன் நிறைவடைந்த பிறகு ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

படங்களின் சூட்டிங்கில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகிக் கொண்டார் கமல் ஹாசன். இதனையடுத்து அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் அல்லது சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பது உறுதியானது. ‌

இது எப்படி சாத்தியமானது என்பது குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருபவர் பிரதீப் மில்ராய் பீட்டர். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் கேட்டுக்கொண்டது பேரிலேயே சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் நடிகர் சிம்பு சில நடிகர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சிபாரிசு செய்த போது அவர்களுக்கு வாய்ப்பளித்து உள்ளார் பிரதீப் மில்ராய். அதற்கு ஈடாகவே சிம்பு தற்போது இதற்கு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படியோ செய்து தொகுத்து வழங்கும் ஸ்டைலில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.