Simbu Hanshika Love : Director Tweet Makes Controversy.! | Kollywood Cinema News | Maha Movie Updates | STR | Maha Movie Updates

இயக்குனரின் ட்வீட்டால் சிம்புவுக்கும் ஹன்ஷிகாவுக்கும் இடையேயான காதல் மீண்டும் முளைத்து விட்டதாக ரசிகர்கள் பேச தொடங்கியுள்ளனர்.

ஜமீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்து வரும் திரைப்படம் மகா. அவரின் 50-வது திரைப்படமான இந்த படத்தில் ஹன்ஷிகாவின் காதலனாக சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

கெஸ்ட் ரோல் தான் என்றாலும் அவர் ஹன்ஷிகாவுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் திரையில் தோன்றுவார் என கூறப்படுகிறது.

மேலும் தனக்கு காதலனாக சிம்புவை நடிக்க வைக்குமாறு ஹன்ஷிகா தான் இயக்குனரிடம் பரிந்துரை செய்திருந்தார்.

சத்தியமா சொல்லுங்க, நீங்களா இது? மீண்டும் பேரதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் உள்ளே.!

இந்நிலையில் தற்போது ஜமீல் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் சிம்பு ஹன்ஷிகா ஜோடி இணைந்திருக்கும் போஸ்டர் வெகு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

அவர் ஜோடி என குறிப்பிட்டதை வைத்து ரசிகர்கள் ஹன்ஷிகாவுக்கும் சிம்புவுக்கும் இடையேயான காதல் மீண்டும் மலர்ந்து விட்டது என பேச தொடங்கி விட்டனர். படத்தில் ஜோடியா நடித்தவர்களையும் ஜோடினு தானே சொல்வாங்க. இயக்குனர் அப்படி தான் சொன்னாரோ என்னவோ?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.