சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற நிலையில் ரசிகர்கள் அதனை ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Simbu Got Doctorate : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்  - ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த நிலையில் இன்று வேல்ஸ் யுனிவர்சிட்டி நடிகர் சிம்புக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அந்தப் பக்கம் இன்று அறிவிக்கப்பட்டது. நடிகர் சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் டாக்டர் சிலம்பரசன் டிஆர் என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் சிம்புவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.