இன்ஸ்டாகிராமில் அதிகமாக பின்பற்றுவோர் எண்ணிக்கையை பெற்று முதல் இடத்தை சிம்பு பிடித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கோலிவுட் திரைப்படத்திலிருந்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சிம்பு. அதிக அளவில் பெண் ரசிகைகளை கொண்டுள்ள இவர் தற்போது வெந்து தணிந்தது காடு, 10 தல உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் ஒரு கோடியே தொட்டிருக்கிறார். இதனால் நடிகர் சிம்பு தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோவோர்களை கொண்டுள்ள நடிகர் என்ற பெருமையுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.