Simbu Dedication Stuns Maha Team | STR | Hansika | Kollywood | Tamil Cinema | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Simbu Dedication Stuns Maha Team :

சிம்புவின் இந்த மாற்றம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

இது ஒருபக்கம் இருக்க சிம்புவின் காதல் எபிஸோடுகளும் அனைவருக்கும் தெரிந்த கதைகள்தான்.

மிஸ்டர் லோக்கல் தோல்வியால் கதையை மாற்றிய சிவகார்த்திகேயன் – பரிதாபமான நிலை!

இவர் தனது முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் மகா படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது.

இதன் படப்பிடிப்பில் தினமும் சரியான நேரத்திற்கு சிம்பு வந்து விடுகிறாராம் மேலும் தன்னுடைய போர்ஷன் முடிந்ததும் கேரவனுக்குள் செல்லாமல் ஸ்பாட்டிலேயே அமர்ந்து படப்பிடிப்பை நன்றாக கவனித்து வருகிறாராம்.

இதுபோக தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனரிடம் அடுத்த நாள் படப்பிடிப்பு குறித்த தகவல்களையும் காட்சிகள் குறித்த செய்திகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு முழு அர்ப்பணிப்போடு நடித்து வருகிறாராம்.

சிம்புவின் இந்த மாற்றம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.