பத்து தலை ஷூட்டிங்கில் சிம்பு பாதியில் வெளியேறியதாக தகவல் பரவிய அதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியானதை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் இந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.

பத்து தல சூட்டில் பாதியில் வெளியேறினாரா சிம்பு?? தீயாக பரவிய சர்ச்சை தகவல் - இயக்குனர் கொடுத்த விளக்கம்

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 10 தல படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் தொடங்கிய நடந்து வந்த நிலையில் இயக்குனர் சிம்புவை சட்டையை கழட்டி நடிக்க சொன்னதால் சூட்டிங்கில் இருந்து பாதியில் வெளியேறியதாக தகவல்கள் தீயாக பரவின.

பத்து தல சூட்டில் பாதியில் வெளியேறினாரா சிம்பு?? தீயாக பரவிய சர்ச்சை தகவல் - இயக்குனர் கொடுத்த விளக்கம்

இப்படியான நிலையில் இது குறித்து இயக்குனர் கிருஷ்ணா ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் எதிர்பார்ப்பதை விட நடிகர் சிம்பு எங்களுக்கு முழு ஒத்துழைப்புடன் சிறந்த நடிப்பை கொடுத்து வருகிறார் என விளக்கம் அளித்துள்ளார்.