இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி அவர்களின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.

Simbu Condolences to Venkat Prabhu Family : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் கங்கை அமரன். இவர்களது மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி.

இயக்குனர் கங்கைஅமரன் மனைவியான மணிமேகலை அம்மாள் உடல்நலக் குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு தாயார் மறைவுக்கு சிம்பு வெளியிட்ட இரங்கல் அறிக்கை.!!

இந்த நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் நல்ல நண்பர்கள். எதையும் எளிமையாக கடந்து செல்வார்கள். இரண்டு வருடம் உங்கள் உடன் பணிபுரிந்த போது இதனை நான் நேரில் பார்த்துள்ளேன்.

ஆனால் அளவு கடந்த அன்பு வைத்த அம்மாவின் இழப்பை எப்படி கடப்பீர்கள் என தெரியவில்லை? உங்களது துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இதை ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு. அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு தாயார் மறைவுக்கு சிம்பு வெளியிட்ட இரங்கல் அறிக்கை.!!