காக்கி சட்டையில் ஆட்டோ டிரைவராக சிம்பு மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu As Auto Driver Video : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

காக்கிச்சட்டையில் ஆட்டோ டிரைவராக மாறிய சிம்பு.. இணையத்தில் லீக் ஆன வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் வீடியோ.!!

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரானா குமாரு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் சென்று ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பான பிக் பஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செம மாசான லுக்கில் இந்த நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மறுநாளே நடிகர் சிம்பு ஆட்டோ டிரைவர் லுக்கில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. முதலில் இது விளம்பர படத்திற்கான ஷூட்டிங் எனச் சொல்லப்பட்ட நிலையில் இது வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் வீடியோ என தகவல் கசிந்துள்ளது.

காக்கிச்சட்டையில் ஆட்டோ டிரைவராக மாறிய சிம்பு.. இணையத்தில் லீக் ஆன வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் வீடியோ.!!

ஆட்டோ டிரைவராக வரும் சிம்பு செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.