சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலுக்கு டி ராஜேந்தர் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu and Trisha Marriage Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிக்க வந்த புதிதில் ஆன் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் அதிகம் கொண்டிருந்தார்.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றால் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

அதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு கிராமத்து கதை ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் திருப்பதி, மதுரை என கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகிறார்.

இந்த நிலையில் டி ராஜேந்தர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது அது உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது.

சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் கல்யாணமா?? பத்திரிக்கையாளர் கேள்விக்கு டி ராஜேந்தர் கொடுத்த ரியாக்சன்.!!

அதற்கு டி ராஜேந்தர் எந்தவித பதிலையும் சொல்லாமல் தண்ணீர் குடித்த படி அடுத்த கேள்விக்கு தாவும் விட்டார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. எதையும் பளிச்சென பேசுபவர் டி ராஜேந்தர். அப்படி இருக்கையில் இது உண்மை இல்லை என்றால் இல்லை என மறுப்பு தெரிவித்து இருக்கலாம்.

அவர் அமைதியாக அடுத்த கேள்விக்கு தாவியது இந்த தகவல் உண்மையா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.