நடிகர் சிம்புவிற்கு AAA படம் பல்வேறு பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்திக்க வைத்து இருந்தாலும் அந்த படத்திற்கு பிறகு தான் STR காட்டில் மழை பெய்ய தொடங்கியது.

மணிரத்தினம், வெங்கட் பிரபு, கார்த்திக் நரேன் என அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க உள்ளார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள AttarintikiDaredi என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

தற்போது இப்படத்தின்  படப்பிடிப்புகள் ஜோர்ஜியா என்ற பகுதியில் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய ஸ்டைலை முற்றிலுமாக மாற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.