Simbu and Hari combo returns
Simbu and Hari combo returns

Simbu and Hari combo returns  – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. இந்நிலையில் கவுதம் கார்த்திக்குடன் முப்ஃடி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அறிவித்தார்.

முதல்முறையாக பார்ட் 2 படத்தில் நடிக்கும் சிம்பு – என்ன படம் தெரியுமா?

அதுபோக ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக்கில் சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படங்கள் போக தற்போது வேறொரு படத்திலும் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் மன்னன் ஹரி இயக்கத்தில்தான் சிம்பு அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளாராம்.

முதல்முறையாக பார்ட் 2 படத்தில் நடிக்கும் சிம்பு – என்ன படம் தெரியுமா?

இவர்கள் மூவரும் ஏற்கனவே கோவில் படத்தில் இணைந்திருந்த நிலையில அந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளது.

ஹரியின் கடைசி இரண்டு படங்களும் வணிக ரீதியாக தோல்வி பெற்றதால் இந்த படத்தை எப்படியாவது ஹிட் செய்யவேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறாராம்.

மேலும் சிம்புவின் மாஸ் இமேஜுக்கு ஏற்ப வெறித்தனமான ஸ்க்ரிப்ட் ஒன்று தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.