Simbu and Hansika : mahaa | STR | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | STR & Hansika on the Sets of Maha

Simbu and Hansika :

நீண்ட நாள் பிரிந்திருந்த காதலியை சேர்ந்த பிறகும் அவருடன் வெளியே செல்லமுடியாமல் சிம்புவை அவருடைய ரசிகர்கள் பாடாய் படுத்துகிறார்கள்.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

மறுபடியும் ஒரு ஏ படத்தில் அமலா பால் – இப்ப இது தேவையா?

இது ஒருபக்கம் இருக்க சிம்புவின் காதல் எபிஸோடுகளும் அனைவருக்கும் தெரிந்த கதைகள்தான்.

இவர் தனது முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் மகா படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் படப்பிடிப்பு இடைவேளையில் ஹன்சிகா உடன் அடிக்கடி சிம்பு வெளியே செல்கிறாராம்.

அதை ரசிகர்கள் சிலர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு வருவதால் ஹன்சிகாவுடன் வெளியில் செல்ல சிம்பு தற்போது தயக்கம் காட்டுகிறாராம்.

இப்படி நீண்ட நாள் பிரிந்திருந்த காதலியை சேர்ந்த பிறகும் அவருடன் வெளியே செல்லமுடியாமல் சிம்புவை அவருடைய ரசிகர்கள் பாடாய் படுத்துகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.