Simbu and GVM Movie Heroine

மூன்றாவது முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu and GVM Movie Heroine : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சிம்புவின் அடுத்த படத்திற்கு கௌதம் மேனனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

இது எந்த அளவிற்கு உண்மை. மீண்டும் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நயன்தாரா வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார் என்பதால் இந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வார் எனவும் எதிர்பார்க்கலாம்.